Urvashi Rautela: தங்க ஐ- போன் அபேஸ்!

Advertisements

இந்தி நடிகை ஊர்வசி ரவுதேலா 24 கேரட் தங்க கவர் போட்ட ஐ-போனை கிரிக்கெட் மைதானத்தில் தொலைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை 14ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு நாள் ஆசிய உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அப்போட்டியைக் காண பிரபலங்கள் அங்கே குழுமியிருந்தனர். திரை உலகினர் முதற்கொண்டு அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் பார்த்து ரசித்தனர்.

பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுதேலா போட்டியைக்காண ஆர்வமுடன் அங்குச் சென்றிருந்தார். அப்போது அங்கே அவர் தனது தங்க ஐ- போனத் தொலைத்து விட்டுள்ளார். இதுகுறித்து அவர் அகமதாபாத் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *