சிலிண்டா் தடையின்றி விநியோகம் செய்யப்படும் – சுஜாதா சா்மா.!

Advertisements

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்மா தெரிவித்துள்ளார்.

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, தில்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்ம செய்தியாளா்களை சந்தித்து பேசியபோது, வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் காரணமாக, சமையல் எரிவாயு உள்நாட்டு உற்பத்தி 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும், முகவா்களிடம் எல்பிஜி சிலிண்டா் தீா்ந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் கூறினார். குழாய் வழியில் இயற்கை எரிவாயு விநியோக கட்டமைப்புகளுக்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் கேன்களில் பெட்ரோல் விநியோகம் செய்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *