Chennai : தலைமைச் செயலகத்தில் புகைமூட்டம்.! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி..!

சென்னை தலைமைச் செயலகத்தின் வெளிப்பகுதியில் இன்று திடீரென கடுமையான புகைமூட்டம் சூழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் புகைமூட்டம் காரணமாக தலைமைச் செயலகத்திற்கு வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் அங்கே நின்றிருந்த பொதுமக்களுக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அந்தச் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் மற்றும் போதிய பார்வைத்திறன் (Visibility) குறைபாடு காரணமாகக் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

புகைமூட்டத்திற்கான துல்லியமான காரணம் என்ன? ஏதேனும் குப்பைக் கிடங்கில் தீ விபத்தா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *