Train Service : தொடங்கியது வேளச்சேரி – பரங்கிமலை இடையே ரெயில் சேவை.!

Advertisements

சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரெயில் சேவை இன்று தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரெயில்களை இயக்குவதற்கான தற்காலிக அதிகாரப்பூர்வச் சான்றிதழை ரெயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் ஜனக்குமார் வழங்கியுறுப்பதாகவும் இன்று முதல் ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாதுகாப்பு கமிஷ்னர் வழங்கிய வழிக்காட்டுதல்களின் படி ரெயில்வே நிர்வாகம் தரப்பிலான அனைத்து கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

ரெயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வின் போது, சென்னை மெட்ரோ ரெயில் உள்கட்டமைப்பின் மேல் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாரங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் பறக்கும் சேவை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *