நிதிச்சுமையை ஏற்றத் திமுக அரசு திட்டம் – நாகேந்திரன் குற்றச்சாட்டு

தனியாரிடம் மின்சாரம் வாங்குவதைக் குறைத்துக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்படும் என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறாகச் செயல்பட்டு மக்கள் மீது நிதிச்சுமையை ஏற்றத் திமுக அரசு திட்டம் தீட்டுவதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியாரிடமிருந்து எண்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் 2200 மெகாவாட் மின்சாரத்தைத் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பல கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிக்கு வருமுன் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதைக் குறைத்து மாசற்ற மின்னுற்பத்தி நிலையங்கள் மூலம் இருபதாயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டுக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்படும் எனத் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சிக்கு வந்தபின் அதற்கு நேர்மாறாக மின்வாரியத்தை நட்டத்தில் தள்ளித் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி விலையை உயர்த்தி மக்கள் மீது நிதிச்சுமையை ஏற்றி வருவதாக நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *