உளுந்தூர்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் பூசாரி பக்தர்கள் தலையோடு தலை முட்டி டு டு என்று கூறி வினோதமாகப் பேய் விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.கொனலவாடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மன்னாதீஸ்வரர் பச்சைவாழியம்மன் ஆலய திருத்தேர் மற்றும் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது வினோதமான முறையில் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குப் பேய் மற்றும் காத்து கருப்பு பிடித்திருந்தால் பேய் பிடித்தவர்களும் பூசாரியும் சேர்ந்து அவர்கள் இருவர் தலையோடு தலையாக முட்டி டு டு என்று கூறி வினோதமான முறையில் பேய் விரட்டும் சம்பவம் அங்கு நடைபெற்றது,
டு டு என்று தலையோடு தலைமுட்டி கொண்டால் பிடித்திருந்த பேய் மற்றும் காத்து கருப்புகள் விலகிவிடும் என்பது அப்பகுதி மக்களின் காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாகும். திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் ஏராளமானோர் தங்களுக்கு பிடித்திருந்த பேயினை பூசாரிமூலம் டு டு என்று விரட்டிக் கொண்டிருந்தனர். இதனை ஆச்சரியத்துடன் பக்தர்கள் வியந்து பார்த்தனர்.
