திரைப்படங்களில் காட்டும் அக்கறையை கல்வியில் காட்டுக – விஜய்யை சாடிய சீமான்.!

தவெக அரசு திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதில் காட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதிகாலையிலேயே மக்களைத் திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.

திரைநாயகர்களையே தலைவர்களாகக் கருதும் மனநிலையிலிருந்து இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அரசே திரைமோகத்தில் மேன்மேலும் மூழ்கச் செய்வது பொறுப்புள்ள செயல்தானா? என்று வினவியுள்ளார்.

இம்முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதில் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *