5 ஆயிரம் கோழிகள் தீயில் எரிந்து நாசம்!

Advertisements

ஆம்பூர் அருகே மின்கசிவு காரணமாகக் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில்  10 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம்  கோழிகள் மற்றும் தீவன  பொருட்கள் எரிந்து  நாசமாயின.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருகம் பகுதியைச் சேர்ந்த துரைமுருகன்  தனது விவசாய நிலத்தில் பண்ணைகள் அமைத்துக் கோழிகளை வளர்த்து வந்துள்ளான்.  ஒரு பண்ணையில் 5 ஆயிரம்  கோழிகள் வீதம் இரண்டு பண்ணையில் 10 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்ததார்.

இந்த நிலையில் அதிகாலையில் அப்பகுதியில் சூறைக்காற்றுடன் லேசான மழை தொடங்கியபோது கோழி பண்ணையில் வைக்கப்பட்டிருந்த மின் இணைப்பு பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீபற்றி எரிந்தது.

உடனடியாக  ஆம்பூர் தீயனைப்புத்துறை மற்றும் உமராபாத் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து அங்குவந்த  தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,  சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தில்  10 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம்  கோழிகள் மற்றும் தீவன  பொருட்கள் எரிந்து  நாசமானதாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *