
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே பெண் கவுன்சிலர் வீட்டில் 6 பவுன் நகை திருடிய முருங்கை விளை பகுதியைச் சேர்ந்த மாசாண முத்து என்ற ரகு என்பவரை ராஜாக்கமங்கம் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பனவிளையை சேர்ந்தவர் சுதா இவர் ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் இரண்டாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை சுதா கோவிலுக்குச் செல்வதற்காக வீட்டு கதவைப் பூட்டி உள்ளார். பின்னர் கணவரின் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டின் சாவியை வீட்டில் வைத்துள்ளதாகக் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த கணவர் ராஜேந்திரன் சாவியை தேடியபோது காணவில்லை இதுபற்றி ராஜேந்திரன் மனைவியிடம் கூற அவரும் வந்து பார்த்தபோது சாவி இல்லை இந்த நிலையில் படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதிலிருந்து ஆறு பவுன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தனர் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே பகுதியில் சுற்றித்திரிந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் முருங்கை விளை பகுதியைச் சேர்ந்த மாசாண முத்து என்ற ரகு என்பது தெரிய வந்தது.மேலும் கொத்தனார் என்பதும் தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று சுதா வீட்டைப் பூட்டிவிட்டு சென்றபோது அருகில் உள்ள காம்பவுண்டில் ரகு குடி போதையில் இருந்ததாகவும் சுதா பேசியதை செல்போனில்கேட்டு நகையைத் திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் ரகு திருடிய 6 பவுன் நகையைப் போலீசார் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

