விவசாயிகளை ஏமாற்றாமல், அனைத்துப் பயிர்க்கடனையும் தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தவெக, விவசாயிகளை ஸ்லாப் வாரியாகப் பிரித்துச் சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
அதனைத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் கடுமையாக எதிர்த்ததாகக் கூறியுள்ளார். இந்தச் சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சு நடத்த அழைப்போம் என அமைச்சர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும், இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த அரசு வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று வினவியுள்ளார். விழாக்களைக் கூடக் கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாகக் கொண்டாட முடியுமா? என்ற வேதனையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
எனவே விவசாயிகளை ஏமாற்றாமல், அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

