கண்ணீருடன் விடைபெறும் ஆஸி..கேப்டன் அலிஷா ஹீலி!

Advertisements
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஷா ஹீலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஷா ஹீலி தனது சொந்த மண்ணில் அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருடன் ஓய்வு பெற உள்ளார். தொடர்ந்து, இந்த முடிவு நீண்ட காலமாக வந்துகொண்டிருப்பதாகவும், கடந்த சில வருடங்கள் தனக்கு மனரீதியாகச் சோர்வை ஏற்படுத்தியதாகவும், காயங்கள் முதன்மையான சவால்களில் ஒன்றாக இருந்ததாகவும் கூறினார்.
இந்த நிலையில், அவர் ஆஸ்திரேலிய அணிக்காகத் தலைமை வகித்து ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் இரண்டு முறையும், 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆறு முறையும் என மொத்தம் 8 ஐசிசி கோப்பைகளை வென்ற அணிகளில் இடம்பெற்ற சாதனையையும் படைத்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *