உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமைதித் திட்டம்.!

Advertisements

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஓர் அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தயாரித்துள்ளார். புளோரிடாவில் இது குறித்து உக்ரைன் அதிகாரிகளுடன் ஏற்கெனவே பேச்சு நடைபெற்றது.

இதையடுத்து மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபரின் மருமகன் ஜார்டு குஷ்னர் ஆகியோர் அமைதித்திட்டம் குறித்துப் பேச்சு நடத்தினர்.

ஐந்து மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.து குறித்துப் பேசிய ரஷ்ய அதிபர் மாளிகைச் செய்தித்தொடர்பாளர், பேச்சு பயனுள்ளதாக அமைந்ததாகவும், அதேநேரத்தில் அமைதித் திட்டத்தின் ஒருசில பகுதிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் குறிப்பிட்டார்.
இதுபற்றி அமெரிக்காவின் ஸ்டீவ் விட்காப்போ, ஜார்டு குஷ்னரோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக ரஷ்ய அதிபர் புடின் அமைதித் திட்டத்தில் செய்துள்ள மாற்றங்களை ஏற்க முடியாது என்றும், ஐரோப்பா போரைத் தொடங்க விரும்பினால் அதற்கு ரஷ்யாவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *