அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்!

Advertisements

மதுராந்தகம்: 

செங்​கல்​பட்டு மாவட்​டம், மதுராந்​தகம் அடுத்த கீழ்​மரு​வத்​தூரில் 10 ஆண்டு​களுக்கு மேலாக அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்​மாக் மதுபானக் கடையில் மதுபான பாட்​டில்கள் வாங்​கு​வதற்​காக, அதிகள​வில் மதுபிரியர்கள் வந்து செல்​கின்​றனர்.

மேலும், அந்த வழியாகச் செல்​லும் பெண்களைச் சிலர் கிண்டல் செய்து, விஷமச் செயல்​களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இது தவிர, விவசாய நிலங்களுக்கு அருகில் மதுக்கடை அமைந்​துள்ள​தால் அங்கேயே அமர்ந்து மது அருந்​து​வதுடன், பாட்​டில்கள் மற்றும் பிளாஸ்​டிக் கழிவுகளை அங்கேயே வீசி​விட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பலமுறை புகார் தெரி​வித்​தும் நடவடிக்கை எடுக்​காத​தால், மதுக்​கடையை அகற்​றக்​கோரி அப்பகு​தியை சேர்ந்த பொது​மக்​கள், பெண்கள் மதுக்​கடையை முற்றுகை​யிட்டு போராட்​டத்​தில் ஈடுபட்​டனர்.

தகவல் அறிந்த மேல்​மருவத்​தூர் போலீ​ஸார், போராட்​டத்​தில் ஈடுபட்ட பொது​மக்​களிடம் சமாதானப் பேச்சு​வார்த்​தை​யில் ஈடுபட்டனர். இதில், இரு தரப்​பினர் இடையே வாக்கு​வாதம் ஏற்பட்​டது. பின்னர், உரிய அதிகாரி​யிடம் தெரி​வித்து நடவடிக்கை எடுக்​கப்​படும் எனப் போலீஸார் உறு​தி​யளித்​தனர். இதையடுத்து அனை​வரும் கலைந்து சென்​றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *