
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா ஆகிய இருநாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய ஆப்பிரிக்க நாடனா காங்கோ, ருவாண்டா நாடு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகின்ற நிலையில், தற்போது இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த, அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா தலைமையில் நடைபெற்றது. இதில், நடந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிக்கு ஒப்புக்கொண்டன.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து, காங்கோவில் உள்ள கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெட்டி எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.


