உக்ரைனின் கீவ் நகரத்தில், ரஷ்யா இராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்..!

உக்ரைனின் கீவ் நகரத்தில், ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர். உக்ரைன் தலைநகரான கீவ் நகரத்தின் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தியது.

இந்த, தாக்குதலில், ரஷ்ய இராணுவம் 430 ட்ரோன்களும், 18 ஏவுகணைகளையும் பயன்படுத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

பின்னர், ரஷ்யாவின் இந்த பயங்கர தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 35 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல், ஒடேசா, கார்கிவ் மாகாணங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *