பீகார் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பீகாரில், 243 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு 6 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு 11 ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த, தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளமும், இந்தியா கூடணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளமும் இடம்பெற்றன.
பின்னர், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.
இதைத்தொடர்ந்து, இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்று படுதோல்வியடைந்தது.



