
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள தொ்னோபில் நகரில் ரஷ்யா இராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இது, தொடர்பாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தொ்னோபில் நகரில் ரஷ்யா இராணுவம் நடத்தியத்
தாக்குதலில், மூன்று சிறுவர்கள் உட்பட 25 போ் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 75 போ் காயமடைந்தனா். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக, உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி
சிபிகா பேசியப் போது, ரஷ்யாவின் அமைதித் திட்டங்கள் இப்படித்தான் இருக்கின்றன எனத் தெரிவித்தார். மேலும், அவர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முறையிடுவோம் எனக் கூறினார்.


