
2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 59 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
கட்சியின் இளைய முகமும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றவருமான உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்..
சட்டமன்றக் கொறடாவாக எ.வ.வேலு மற்றும் சட்டமன்றக் குழுப் பொருளாளராக ஐ.பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது 35 கால அரசியல் வாழ்வில் முதல்முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளதால், சட்டமன்றத்தில் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு போன்ற மூத்த தலைவர்கள் அவருக்குத் துணையாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது… ஜோசப் விஜய்யின் தவெக அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தி.மு.க-வின் குரலாக இனி உதயநிதி ஸ்டாலின் ஒலிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.


