நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் – அமைச்சர் சம்பத்குமாரின் அதிரடிப் பதில்!

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சரும், கோவை வடக்கு தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வுமான சம்பத்குமார் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் சார்பில் கோவை மாவட்டத்தில் தொகுதி வாரியாக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் விஜய்யின் அரசியல் பாணியைப் பின்பற்றி நடிகர் தனுஷும் அரசியலில் களம் இறங்கி தனது பயணத்தைத் தொடங்குகிறாரா என்ற கேள்வி எழும்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்து அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்குவதற்கும், மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதற்கும் முழுமையான உரிமை உண்டு என்றும், அந்த அடிப்படை உரிமை இந்தியாவில் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், தங்களை ஆளப்போகும் தகுதியானவர்கள் யார் என்பதை இந்த நாட்டின் மக்களே இறுதி செய்வார்கள் என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தில் மிகச் சிறப்பான மற்றும் மக்கள் நலன் காக்கும் ஆட்சி வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *