நடிகை ரன்யா ராவ்வுக்கு CCTV கேமரா காட்சிகளை வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

துபாயில் இருந்து தங்கக் கட்டிகள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பதிவான CCTV காட்சிகளை தங்களுக்கு வழங்கக் கோரி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரன்யா ராவிடம் CCTV காட்சிகளை வழங்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், விமான நிலைய அதிகாரிகள் அந்தக் காட்சிகளை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ரன்யா ராவ் கேட்டிருந்த 2 நாட்களுக்கான விமான நிலைய CCTV காட்சிகளையும் வழங்க வேண்டும் என பெங்களூரு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *