காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க அமித்ஷாவிடம் உமர் அப்துல்லா கோரிக்கை.!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இன்று சந்தித்து, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதலமைச்சர் உமர்-அப்துல்லா. இன்று தலைநகர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அமித்ஷாவிடம் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்கக்கோரி. உமர் அப்துல்லா கடந்த ஜுலை 20-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *