Advertisements

லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிர்மாய்க்கப்பட்டார். இதற்குப், பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதில் 77 பேர் உயிர்மாய்க்கப்பட்டனர். இந்நிலையில், தெற்கு லெபனானில் உள்ள நபதியே பகுதியில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானில் இருந்து இதுவரை 83 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தால், அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements


