
ஜெயக்குமார் வேண்டும் என்றால் தவெகவில் இணையலாம் என்றும் அவருக்கு அதிமுகவில் சீட் கிடைக்காது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாககுழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாககுழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நமது வாக்கு ஜனநாயகத்தை காக்குகின்ற வாக்கு என்றும் அதை வீணடிக்காமல் திமுகவை வீழ்த்த வாக்களியுங்கள் என்று வலியுறுத்தினார்.
தேர்தல் களத்தில் திமுகவினர் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றார். வெகவிடம் வந்துவிடுவோம் என கூறி திமுகவிடம் கூடுதல் சீட்டை காங்கிரஸ் பெற்று இணைந்துள்ளது என்று கூறினார். ஜெயக்குமார் வேண்டும் என்றால் தவெக விற்க்கு வரலாம் என்றும் அவருக்கு அதிமுகவில் சீட் கிடைக்காது என்றும் தெரிவித்தார்.


