லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது பழி வாங்கும் நடவடிக்கை : கே.என். நேரு .!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது தவெக அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என்றும்,  சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனையை செய்யலாம் என்றும் தி.மு.க.முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் என 19 இடங்களிலும் சோதனை நடந்தினர்.சென்னையில் ரவிச்சந்திரன் அலுவலகத்திலும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி தில்லை நகரில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இது தொடர்பாக, திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை  நடத்திய சோதனை குறித்து, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, என் வீட்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர், சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம் என்றும், என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை.

துவாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி வெல்வோம் என்றும், அலுவலகத்தில் இருந்து வழக்கமான ஒரு பைல், வரவு செலவு கணக்கு எழுதி வைத்திருந்த துண்டு சீட்டை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *