
மாற்றத்தை விரும்பும் தெலுங்கானா மக்கள். Telangana
தெலுங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மஹபூப் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், தெலுங்கானாவுக்கு ஊழலற்ற அமைதியான ஆட்சி தேவை என்று குறிப்பிட்ட அவர், பாஜக மட்டுமே ஊழலற்ற நல்ல ஆட்சியை வழங்க முடியும் என்று பேசினார்.
விவசாயிகள் பெயரைச் சொல்லி அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மாநில அரசுகள் சுரண்டிக் கொண்டு, விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதாகக் குறை கூறினார்.
ஆளும் பிஅர்எஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால், விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர், ஆனால் இதுகுறித்து மாநில அரசு சிறிதும் கவலை கொள்வதில்லையென மோடி தெரிவித்தார்.





