
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், மதுரையில் சிறுவன் உயிர்மாய்க்கம் செய்யபட்டது குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 உயிர்மாய்ககம் செய்யப்பட்ட வழக்குகள், 4 இரட்டைக் உயிர்மாய்ககம் செய்யப்பட்ட வழக்குகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை என்று குறிப்பிட்டார்.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி என்று தெரிவித்தார். கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது என்று கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் உயிர்மாய்க்கம் செய்யப்பட்டிருக்கிறான் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார். மாண்புமிகு முதல்வர் எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? எனக் கேள்வி எழுப்பினார்.
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.


