Advertisements

விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உயிர்பறிப்பு செய்த குற்றவாளிக்கு தூத்துக்குடி நீதிமன்றம் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிர்பறிப்பு செய்த வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, உயிர்பறிப்பு செய்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த நிலையில், இந்தக் குற்ற சம்பவத்தில் முனீஸ்வரன் ஈடுபட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இரண்டே மாதங்களில் விசாராணை நிறைவடைந்த நிலையில், இன்று தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பிரீத்தா. குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.
Advertisements


