திரிசூலத்தில் கள்ளக்காதலியின் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட நண்பரை 17 வயது சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேரை வைத்து நண்பரை உயிரிழக்கச் செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலத்தில் திண்டிவனத்தைச் சேர்ந்த செல்வகுமார் கட்டிடங்களுக்கு ஜல்லி போடும் வேலை செய்து வருகிறார். திருமணம் ஆகாத நிலையில் தனியே வீடு எடுத்து திரிசூலம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆன ரீணா கணவனை பிரிந்து திரிசூலம் பகுதியில் தனியே வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ரீனாவிற்கும் செல்வகுமாருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ரீனா மற்றும் அவரது தோழி ரெஜினாவுக்கும் 17 வயதுடைய சிறுவனிடம் பழக்கம் ஏற்பட்டு மூன்று பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையறிந்த, செல்வகுமார் தட்டி கேட்டதோடு அவரது நண்பர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து, ரீனா மற்றும் ரஜிதா இருவரும் செல்வகுமாரை வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு சமாதானம் பேச அழைத்தனர்.
அப்போது, போதையில் இருந்த செல்வகுமாரை 17 வயது சிறுவன் மற்றும் அவனுடன் வந்திருந்த அலெக்ஸ் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வகுமாரை முகத்தில் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், சத்தம் கேட்டு பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு வருவதைக் கண்டு அங்கிருந்து நான்கு பேரும் தப்பி ஓடினர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வகுமாரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




