அரசுப்பள்ளி மாணவியிடம் அமைச்சரின் செயல் – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள், ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும் என்று விமர்சித்தார். நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும், ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *