இந்தியாவுடனான உறவு குறித்து மனம் திறந்த நெதன்யாகு!

இந்தியாவில் இருந்து தனக்கு ஆதரவு குவிந்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்தார். அப்போது, அமெரிக்க அமைச்சர் ஜே.டி வான்சை தான் மதிப்பதாகவும் தங்களுக்குள் நல்ல உறவு உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், அதனால் மட்டும் அவர் சொல்லும் எல்லாவற்றிலும் நான் உடன்பட வேண்டும் என்று அர்த்தம் கிடையாது என்று கூறினார்.
அமெரிக்காவில் இதுவரை இருந்த அதிபர்களிலேயே டிரம்ப் தான் தங்களில் சிறந்த நண்பர் என்று தெரிவித்தார். ஆனால், தங்களுக்கு வேறு சில நண்பர்களும் உள்ளனர். அதில் குறிப்பாக, இந்தியா அந்நாட்டில் 1.4 பில்லியன் மக்கள் உள்ளதாகவும் அங்கு தங்களுக்குப் பேராதரவு உள்ளதாகவும்  தெரிவித்தார். மேலும், இந்தியாவில் இருந்து தனக்கு ஆதரவுகள் குவிந்து வருவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *