
நைஜீரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடும் தாக்குதலை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் அந்நாட்டில் உள்ள கிறித்துவர்கள் மீது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு அரசும் அமெரிக்கக் கூட்டுப் படைகளும் இணைந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது கடும் தாக்குதலை நடத்தி வருவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்கப் படைப்பிரிவு, ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது எண்ணற்ற துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக டிரம்ப் தனது டுருத் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் நைஜீரிய வெளியுறவு அமைச்சர் யூசுப் மைதமா துக்காரும், பயங்கரவாதிகளைக் குறிவைத்துக் கூட்டாகத் தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.


