Tamilnadu : இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தகவல்.!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாகத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று கோவை, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *