“பஞ்ச் டயலாக் பேசுவதை நிறுத்துங்கள்” – முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை!

பஞ்ச் டயலாக் பேசிப் பாதகம் ஏற்படுத்தாமல் விவசாயிகளைப் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் முன்வருவாரா? என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் வினவியுள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அண்டை மாநிலமான கர்நாடகம் மேகேதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்போவதாகக் கூறித் தமிழகத்தை மிரட்டுவதாகக் கூறினார்.

கேரளத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம் என்று கூறித் தமிழக விவசாயிகளை மிரட்டுவதாகத் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் உழவர்களின் வாழ்வாதார உரிமையை மீட்டெடுப்பாரா? இல்லை எப்போதும் போலப் பஞ்ச் டயலாக் பேசிப் பஞ்சர் ஆக்குவாரா? என்று வினவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *