கேரள அரசின் பட்ஜெட் – போக்குவரத்து, கல்வி மற்றும் மருத்துவத் துறைக்கு முன்னுரிமை!

Advertisements

கேரளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் முதல் பட்ஜெட்டை முதலமைச்சரும் நிதியமைச்சருமான சதீசன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

2026 – 2027 நிதியாண்டுக்கான கேரள அரசின் பட்ஜெட்டை மாநில முதலமைச்சரும் நிதியமைச்சருமான சதீசன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, மாநில அரசு மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் அதை முறியடித்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தனது தலைமையிலான அரசு முனைப்புடன்  செயல்படுவதாகவும் கூறினார். போக்குவரத்துத் துறை வளர்ச்சிக்கு 1578 கோடி ரூபாயும், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் திட்டத்துக்கு 600 கோடி ரூபாயும், பள்ளிக்கல்வித் துறைக்கு 1478 கோடி ரூபாயும், தொழில்வளர்ச்சிக்காக 325 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

எர்ணாக்குளத்தில்  ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த நகைச்சுவை நடிகர் சலீம்குமாருக்கு நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

நலவாழ்வுத்துறைக்கு 1685 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் இரண்டாவது மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை அமைக்க முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *