இந்தியா கடும் கண்டனம்..!

காஷ்மீர் ஒரு நாள் பாகிஸ்தானின் அங்கமாக மாறும் என  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து அந்நாட்டு சட்டசபையில் பேசினார். அப்போது, காஷ்மீர் ஒரு நாள் பாகிஸ்தானின் அங்கமாகும் என்று கூறினார். காஷ்மீரிகளுக்கு சுய நிர்ணய உரிமை வழங்குவதை தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்றும் காஷ்மீர்  சர்வதேச உரிமை பிரச்சனை என்றும் தெரிவித்தார்.

பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் இந்தியா வைத்திருக்கும் திட்டங்கள் மற்றும் சதிகளால் தெற்காசியாவில் நீடித்த அமைதி ஏற்படாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை பிரிக்க முடியாத பகுதிகள் என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை வீட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *