Illegal Relationship: பலியான இரண்டு உயிர்கள்!

Advertisements

கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாததால் அவர்களது மனைவி, கணவரை கொலை செய்த கள்ளக்காதல் ஜோடிகள் மாட்டிக்கொண்டது.

 திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சூர்யா பேட்டையை சேர்ந்தவர் ஷேக் ரபி (வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி  நஸ்ரி.

அதே பகுதியில் உள்ள குடுகுடாவை சேர்ந்தவர் வெங்கண்ணா (35) விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ரமாதேவி.நஸ்ரி, வெங்கண்ணா இருவருக்கும் செல்போனில் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி பேசிய இவர்கள் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினர். இது வெங்கண்ணாவின் மனைவிக்கும் நஸ்ரியின் கணவருக்கும் தெரியவந்தது. அதனால் கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.வெங்கண்ணா தனது மனைவியையும் நஸ்ரியா தனது கணவரையும் கொலை செய்து விட்டால் கள்ளக்காதலை தொடரலாம் என முடிவு செய்தனர்.

கடந்த மாதம் வெங்கண்ணா அவருடைய மனைவி ரமா தேவியை சூர்யா பேட்டையில் உள்ள சந்து பட்டலா பகுதிக்கு அழைத்துச் சென்றார்.அங்கு சாலையோரம் இருந்த ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அங்கு வைத்து ரமாதேவியை அடித்து கொலை செய்தார்.

பின்னர் அவரது உடலை அங்குள்ள சாலையில் வீசினார். இரவு நேரம் என்பதால் ரமாதேவி உடல் மீது வாகனங்கள் ஏறி சென்றன. மறுநாள் தன்னுடைய மனைவி விபத்தில் இறந்து விட்டதாக வெங்கண்ணா நாடகம் ஆடினார்.போலீசார் ரமாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் இந்த சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவர் ரபியை கொலை செய்ய நஸ்ரி திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு ரபி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நஸ்ரி போன் செய்து வெங்கண்ணாவை அழைத்தார்.வெங்கண்ணா அவருடைய நண்பர் மது, ஸ்ரீசைலம் ஆகியோருடன் கள்ளக்காதலியின் வீட்டுக்கு வந்தார். அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரபியை கழுத்தை நெரித்தனர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

பின்னர் ரபியை அவரது அறையில் தூக்கில் தொங்க விட்டனர். தொடர்ந்து நஸ்ரி அங்குள்ள அறையில் படுத்துக்கொண்டார். அந்த அறையை வெளிப்புறமாக வெங்கண்ணா பூட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். மறுநாள் காலையில் நஸ்ரி அவரது அறையில் இருந்து வெளியே வர முடியவில்லை வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளது எனக்கூறி அக்கம்பக்கத்தினருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வந்து அவரது அறையை திறந்து விட்டனர். அப்போது மற்றொரு அறையில் ரபி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அதனைக் கண்டு நஸ்ரி கணவர் தன்னை அறையில் பூட்டி விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கதறி அழுதார்.

சூர்யா பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரபியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் சில இடங்களில் சந்தேகப்படும்படியான காயங்கள் இருந்தன.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நஸ்ரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது அவர் வெங்கண்ணாவை வரவழைத்து கணவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது.

இதேபோல கள்ளக்காதலிக்காக வெங்கண்ணா மனைவியை கொன்று சாலையில் வீசி விபத்து என நாடகம் ஆடியதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து போலீசார் வெங்கண்ணா, நஸ்ரி இருவரையும் கைது செய்தனர்.
மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த மது, ஸ்ரீசைலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *