
கேரள மாநிலம் எர்ணா குளத்தை அடுத்த கடமாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கம் ஒன்றில் ஜெப கூட்டம் நடைபெற்றது. விடுமுறை தினம் என்பதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் அதில் பங்கேற்று இருந்தனர்.2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்குக் கூடியிருந்தனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் ஜெப கூட்டத்தில் பங்கேற்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது காலை 9 மணி அளவில் கூட்ட அரங்கில் திடீரென அடுத்தடுத்து 6 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின.


