Suicide: மாணவன் உயிரிழப்பு!

Advertisements

கொல்கத்தாவைச் சேர்ந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு.

கொல்கத்தாவைச் சேர்ந்த, நக்தலா பகுதியில் வசிக்கும்  பத்தாம் வகுப்பு மாணவன், பாகா ஜடின் பகுதியில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் அக்டோபர் 3-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில்  அச்சிறுவனுக்கு முதலுதவிகள் செய்துள்ளனர்.

அவர் தாயாரின் வேண்டுதலின் படி, அச்சிறுவனை மருத்துவமையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதே நாளில் மீண்டும் சிறுவனின் உடல் நிலை மோசமானதையடுத்து, பெற்றோர் அவனை அதே மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்தனர். இருப்பினும் மாணவன் அக்டோபர் 4-ஆம் தேதி இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனைமீது பெற்றோர் புகார் அளித்ததன் பேரில், மருத்துவ நிர்வாகம் அதனை மறுத்து, சிறுவனின் தந்தையே ஒரு மருத்துவர் தான். எங்களின் சிகிச்சையில் எந்தவித குறையும் இல்லை. அவனுக்குப் படிப்பதில் அழுத்தம் இருந்து இருக்கலாமெனக் கூற, பள்ளி தரப்பில் அவன் சென்ற மாதம் கூட 90 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தான் என்று கூற, சிறுவனின் தந்தையோ, மருத்துவமனையோ புற நோயாளிகள் பிரிவில் மட்டுமே கவனம் செலுத்தியது. என்னுடைய மகனை வெண்டிலெட்டரில் வைத்த செய்தி கூட என்னிடம் தெரிவிக்கவில்லை என்று  புகார் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *