
சத்தீஸ்கரில் ஆட்கடத்தல், மதமாற்றக் குற்றச்சாட்டுகளில் கேரளக் கன்னிமார்கள் கைது செய்யப்பட்டது குறித்துக் கருத்துக் கூறிய முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய், சட்டம் தன் கடமையைச் செய்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம் செய்தல், ஆட்கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் கேரளத்தைச் சேர்ந்த கன்னிமார் இருவரும், உள்ளூர்ப்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஜ்ரங்தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களைத் தாக்கியதுடன் பொய்யான வாக்குமூலம் கொடுக்கும்படி கட்டாயப் படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்த கன்னிமார்களை விடுவிக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் மத்திய அரசுக்கும், சத்தீஸ்கர் மாநில அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தில்லி நாடாளுமன்றத்துக்கு வந்த சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாயிடம் செய்தியாளர் வினா எழுப்பினர். சட்டம் தன் கடமையைச் செய்கிறது என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.




