ரஷ்யா நடத்திய தாக்குதலில் கீவில் 28 பேர் உயிரிழப்பு.!

உக்ரைன் தலைநகர் கீவில் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 159 பேர் காயமடைந்துள்ளனர். வியாழனன்று உக்ரைன் தலைநகர் கீவ் உட்படப் பல்வேறு மாவட்டங்களில் ரஷ்ய ராணுவம் 8 ஏவுகணைகள், 309 டிரோன்கள் ஆகியவற்றின் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் மூன்று வயது, ஆறுவயதுக் குழந்தைகள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனும் ரஷ்யாவும் ஆகஸ்டு எட்டாம் நாளுக்குள் போர் நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரஷ்யா மீது  பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் அதைப் பொருட்படுத்தாமல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *