ராஜஸ்தானில் 6 மாணவர்கள் உடல் நசுங்கி பலி..!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் அரசு பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 17 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பஜன்லால் சர்மா செயல்பட்டு வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலவார் மாவட்டம் மனோகர் தானா பகுதியில் பிப்லோடி அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ம் வகுப்பு வரை வகுப்பறைகள் உள்ளன.இந்நிலையில், திடீரென்று பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் பள்ளியில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இடிபாடுகளுக்குள் சிக்கய ஆசிரியர்கள், மாணவர்கள் அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டதும் அருகே வசிக்கும் மக்கள் ஓடிச்சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களை பொதுமக்கள் மீட்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து மீட்பு பணியை தொடங்கினர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 4 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகினர் 17 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுபற்றி ஜலாவர் மாவட்ட எஸ்பி அமித் குமார் கூறுகையில், ‛‛பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததால் 4 மாணவர்கள் பலியாகி உள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 10 மாணவர்கள் ஜலாவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 3 முதல் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *