Advertisements

ஹார்முஸ் நீரிணையில் புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் கப்பல் உடனடியாக அழிக்கப்படும் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஹார்முஸ் நீரிணையின் சர்வதேச கடல் பகுதியில் உள்ள அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன என்று அமெரிக்க கடற்படை தனக்கு இப்போது அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புதிதாக கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலும் அல்லது படகும் உடனடியாகவும் முழுமையாகவும் அழிக்கப்படும் என்று ஈரானுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஸ்பேஸ் ஃபோர்ஸ் மூலம், ஹார்முஸ் நீரிணையின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் நாங்கள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, பிக்ஆக்ஸ் மலை மற்றும் ஏற்கனவே அழிக்கப்பட்ட பிற மூன்று அணுசக்தி தளங்களையும் நாங்கள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கண்ணிவெடிகளை வைப்பதற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை முழு அமலில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Advertisements


