தவெக-வின் பிரம்மாண்ட மகளிர் தின விழா..!

Advertisements

மாமல்லபுரத்தில்  தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழாவில் தலைவர் விஜய் தலைமையில் இன்று நடைபெறகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில்  தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழா இன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் கலந்து கொள்கிறார்.விழாவில் பங்கேற்பதற்கான  அனுமதிச் சீட்டு இல்லாத கட்சியினரும், மக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தவெக சார்பில் தலைவர் விஜய் பங்கேற்கும் மகளிர் தின  விழா மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார். இவ்விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, மகளிருக்கான திட்டங்கள் குறித்துத் தலைவர் அறிவிக்க உள்ளார் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, வருகின்ற 8 ஆம் தேதி தவெக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்றார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *