நெருக்கடி காலங்களில் கலைஞரின் நிழலாய் நின்றவர்..!

Advertisements

கட்சிக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர் அன்பழகன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர், அமைச்சர் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பாலு, உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், கட்சிக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர் என்று புகழாரம் சூட்டினார். கலைஞரின் மறைவுக்குப் பிறகு தனக்கும் வழிகாட்டியாய் இருந்தவர் என்றும்  குறிப்பிட்டார். நட்புக்கும் – கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த பேராசிரியரின் நினைவு நாளில் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம் என்று கூறினர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *