“குறும்படம் எடுப்பதாகக் கூறி ரூ.5 லட்சம் பறிப்பு!” – பிக்பாஸ் பிரபலம் கைது.!

சென்னையில் 26 வயது இளைஞரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறித்த வழக்கில், பிக்பாஸ் பிரபலமும் மாடலுமான வர்ஷிணியைக் கிண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞரிடம் “குறும்படம் (Short Film) எடுக்க முதலீடு செய்யுங்கள்” என்று கூறி வர்ஷிணி தரப்பினர் அணுகியுள்ளனர். அதனை நம்பி பணம் கொடுத்த அந்த இளைஞரிடமிருந்து ரூ.5 லட்சத்தைப் பெற்றுக்கொண்டதுடன், நிற்குமாறு அவரை மிரட்டி கூடுதலாக ரூ.27 லட்சம் தருமாறு தொடர் கெடுபிடி விடுத்து வந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வர்ஷிணி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வர்ஷிணியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரையும் கிண்டி காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் பணப்பறிப்பு மற்றும் மிரட்டல் வழக்கில் சிக்கிக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *