Jiya Rai: ஆங்கில கால்வாயைக் கடந்து 16 வயது மாற்றுத்திறனாளி உலக சாதனை!

இளம் வயதில் ஆங்கிலக் கால்வாயை நீந்திச் சென்று கடந்து இந்தியா கடற்படை வீரரின் மாற்றுத்திறனாளி மகளான ஜியா ராய் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் அப்போட்ஸ் கிளிஃப் பகுதியிலிருந்து பிரான்சின் பாய்ண்ட் டே லாக்கோர் டியூன் பகுதிவரை பாய்ந்து செல்லும் ஆங்கில கால்வாயின் 34 கிமீ தூரத்தை 16 வயதான இந்திய மாற்றுத் திறனாளியான ஜியா ராய் 17 மணி நேரம் 25 நிமிடங்களில் நீந்திச் சென்று கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அதோடு, ஆங்கிலக் கால்வாயைக் கடந்த உலகின் இளம் வயது பாரா நீச்சல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். அதோடு, இளம் வயதில் குறைவான நேரத்தில் ஆங்கிலக் கால்வாயை நீந்திச் சென்று ஒரு மாற்றுத்திறனாளி வீராங்கனையாகச் சரித்திரம் படைத்துள்ளார்.

ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதற்கு முன்னதாகப் பாக் வளைகுடாவை நீந்திச் சென்று கடந்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், இந்திய கடற்படை வீரரின் மகள். ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மிக உயரிய விருதான பிரதமர் ராஷ்திரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் தற்போது 17 மணி நேரம் 25 நிமிடங்களில் ஆங்கில கால்வாயைக் கடந்து புதிய உலக சாதனை படைத்த ஜியா ராயிற்கு கடற்படை சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *