ஆசிய விளையாட்டின் மகளிர் ஹாக்கிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டியின் மகளிர் ஹாக்கி போட்டியில் பி பிரிவில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி 19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தியது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் தீபிகா 8 கோல்கள் அடித்து அணியின் வெற்றிப் பாதைக்கு வழிவகுத்தார். இதன்மூலம், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.



