சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குத் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது மனைவியுடன் வருகை தந்தார். அப்போது, அவருக்குக் கோவில் நிர்வாகிகள் மேள தாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளித்து, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அவருடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் வந்திருந்தார். இதையடுத்து, நடராஜர் கோவிலுக்குள் சென்ற ஆளுநர், தனது மனைவியுடன் கனகசபை மீது ஏறிச் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவருக்குக் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டு, கோவிலின் பெருமைகளும் விளக்கிக் கூறப்பட்டன.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் நடைபெற்ற ‘மோடி சகஸ்ர நாட்டியாஞ்சலி’ நிகழ்ச்சியில், 1008 மாணவர்கள் நான்கு பிரிவுகளாகப் பங்கேற்று நாட்டியமாடினர். இந்த நாட்டிய நிகழ்ச்சியை ஆளுநரும் அவரது மனைவியும் நேரில் கண்டு களித்தனர்.

