மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைத்துறையின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். இவருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்திக்கு சத்தியலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவு குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாந்தியின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும், சிவாஜி கணேசனின் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

