பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இதில், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜெயிலர் 2 திரைப்படத்தில் இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ள நிலையில் அவரது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

